என்ன கொடுமை சார் இது…”கழன்று சென்ற என்ஜின்” 10 KM_இல் நிறுத்தம்…!!

ஆந்திராவில் 25 பெட்டிகளை கழற்றிய நிலையில் இரயில் என்ஜின் மட்டும் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் இருந்து ஆந்திர மாநிலம் செகந்திராபாத்துக்கு விசாகா எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று வருகின்றது.நேற்று மாலை இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம்  மாவட்டத்தின் நார்சிபட்டினம் பகுதி வந்த போது  எதிர்பாராத வகையில் ரெயிலின் என்ஜின் பெட்டிகளை விட்டு தனியாக பிரிந்தது. என்ஜின் இழுத்துச் சென்ற 25 பெட்டிகளும் எந்த அசைவும் இல்லாமல் நடுவழியிலே தனியாக நின்றது.

Image result for Visakha Express Train

பின்னர் இரயிலில் இருந்த இரயில்வே துறை அதிகாரிகள் அருகில் உள்ள நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் தனியே சென்ற இரயில் என்ஜின் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்ற பின்னர் நிறுத்தப்பட்டடு பின்னர் இரயிலுடன் இணைக்கப்பட்டது.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து ரெயில்வே துறை அதிகாரிகள் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.அதிஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.