புதிதாக பரவும் வைரஸ் நோய் ,சிறுவன் ஒருவன் பலி.

கேரள மாநிலத்தில் தற்போது வெஸ்ட் நைல் என்னும் புதிய வகை வைரஸ் நோய் பரவி வருகிறது இந்த வைரஸ் நோயானது தற்பொழுது சிறுவன் ஒருவனின் உயிரை பறித்துள்ளது

கேரள மாநிலத்தில் புதியதாக வெஸ்ட் நைல் என்னும் வைரஸ் நோய் மக்களிடையே அதிக அளவில் பரவி வருகிறது இதனையடுத்து இது குறித்து ஆராய்ச்சியை மருத்துவ அறிஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர் இந்த ஆராய்ச்சியின் மூலம் எவ்வாறு இந்த வைரஸ் நோய் ஏற்படுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்

பறவைகளை கடிக்கும் கியூலெக்ஸ் என்னும் வகையான கொசுக்கள் பறவைகளைக் கடித்துவிட்டு மனிதனை கடிக்கும் பொழுது அது west nile என்னும் வைரஸை தோற்றுவித்து மனிதனுள் செலுத்துகிறது இந்த west nile virus உடல் முழுவதும் பரவி தீவிர காய்ச்சலை ஏற்படுத்துகிறது

இந்நிலையில் இந்த நோய் குறித்த முழுமையான தகவலை பெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே கேரளாவில் சிறுவன் ஒருவன் இந்த வைரஸால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் மேலும் இந்த காய்ச்சலால் கேரளாவில் இதுவரை மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் இதற்கு முன்பாக ஏதேனும் உயிரிழப்புகள் இந்த வைரஸ் காய்ச்சலில் மூலம் ஏற்பட்டு உள்ளதா என்று விசாரித்து வருகின்றனர்

மேலும் இந்த வைரசினால் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுப்பதற்கு ஆராய்ச்சி மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர் மருத்துவ வல்லுநர்கள் இதனையடுத்து சென்னை திருவனந்தபுரம் உள்ளிட்ட ஐந்து மாநகரங்களில் இந்த ஆராய்ச்சியானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது