லாட்டரி சீட்டில் மேற்கு வங்காள தொழிலாளருக்கு அடித்த அதிர்ஷ்டம்… எத்தனை லட்சம் தெரியுமா…??

கேரள மாநிலம் எர்ணாகுளம் சோட்டானிக்கரையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த படீஷ் என்பவர் சாலை அமைக்கும் பணியில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் அவ்வபோது லாட்டரி சீட்டுகளை வாங்கும் வழக்கத்தை வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று தான் வாங்கிய லாட்டரி சீட்டு வெற்றி பெற்றுள்ளதா என அவர் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் அவர் வாங்கிய லாட்டரி சீட் எண்ணிற்க்கு ரூ.75 லட்சம் பரிசு விழுந்திருந்தது. இவ்வளவு பணம் தன்னுடைய எண்ணிற்க்கு விழுந்ததை தொடர்ந்து படீஷ் உடனடியாக  காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

லாட்டரி சீட்டில் விழுந்த பணத்தை எப்படி பெறுவது அது யாரிடம் சென்று கேட்பது? என தெரியாமல் இருந்த நிலையில் வேறு யாராவது தன்னுடைய லாட்டரி சீட்டை பறித்துக் கொள்வார்களோ என்ற பயத்திலும் அவர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனையடுத்து லாட்டரி சீட்டில் விழுந்த அவருடைய பணத்தை எடுப்பதற்கான நடவடிக்கைகளை தெரிவித்து, அவருக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதாகவும் போலீஸர் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு சென்ற படீஷ் மேற்கு வங்காளத்தில் லாட்டரியில் விழுந்த பணத்தை வைத்து புதிய வீடு கட்ட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply