“உலகின் தலை சிறந்த மாநிலம் மேற்கு வங்காளம்” மம்தா பானர்ஜி..!

மேற்கு வங்காளம்  ஒருநாள் உலகின் தலை சிறந்த மாநிலமாக  உருவாகும் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தலைமையிலான இடது சாரி அரசை வீழ்த்தி   திரிணாமுல் காங்கிரஸ்  ஆட்சிக்கு வந்தது.  பின்னர் மீண்டும் 2016-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்து கொண்டது. இந்நிலையில் மேற்கு வங்காள முதல்வர்  மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில்  இன்று செய்தி ஓன்று வெளியிட்டார்.  அந்த செய்தியில், கடந்த 2016ம் ஆண்டு இதே நாளில், மா, மதி, மனுஷ்  (அன்னை, நம் மாநிலம், மக்கள்) அரசு 2-வது முறையாக பதவியேற்று கொண்டது.

Image result for Mamata Banerjee
வங்காள மக்கள் மிகப்பெரிய அளவில் எங்கள் மீது நம்பிக்கையை வைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார். அவர்களுக்கு நாங்கள் மிக்க நன்றியை  தெரிவித்து கொள்கிறோம். வரும் நாட்களில் அவர்களுக்காக நாங்கள் தொடர்ந்து  பணியாற்றுவோம். மேற்கு வங்காளம் கட்டாயம்  உலகின் மிக சிறந்த மாநிலமாக  ஒரு நாள் உருவாகும்” என்று  மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.