“மக்களை பிரித்தாளும் பாஜக” மேற்கு வங்க முதல்வர் குற்றசாட்டு …!!

பாஜக ஆளும் மாநிலத்தில் மொழிகள் அடிப்படையில் மக்களை பிரித்து ஆள முயற்சிக்கிறார்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பெருவாரியான மாநிலங்களில் பாஜக_வின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவே இந்த தேர்தல் காட்டுகின்றது. மேற்குவங்கம் எப்போதும் திரிணாமுல் மற்றும் 35 ஆண்டுகள் ஆட்சி செய்த இடதுசாரிகள் கோட்டை என்று கருத்தப்பட்டதை பாஜக தகர்த்துள்ளது.வாக்கு எண்ணிக்கை முடிவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களையும் ,  பாஜக  பா.ஜனதா 18 இடங்களையும் பிடித்துள்ளது.

முதல்வர் மம்தா பானர்ஜி க்கான பட முடிவு

இந்நிலையில் தேர்தல் முடிவுக்கு பின்னர் நேற்று திரிணாமுல் காங்கிரஸ்  கட்சியின் சார்பில் நைஹட்டி பகுதியில் ஏற்பாடு செய்து இருந்த பேரணியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர்  மம்தா பானர்ஜி கூறுகையில் , பாஜக  போன்ற கட்சியை நான் ஆதரிக்கப் போவதில்லை. அவர்கள் ஆளும் மாநிலத்தில் மக்களை மொழியின் அடிப்படையில் பிரித்து ஆள முயற்சி செய்கிறார்கள்.  வங்கத்தில் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்ட சில போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேசினார்.