தமிழகத்தில் அனல் காற்று..”105 டிகிரி கொதிநிலை வெப்பம் ” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!!

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நான்கு நாட்களுக்குப் பின்னர் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வெப்பம் குறைய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 29ம் தேதியுடன் கத்திரி வெயில் முடிந்த நிலையில் வெயிலின் அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தினம் தோறும் பகல் நேர வெப்பநிலை கொதிநிலை ஆக மாறுகிறதே தவிர குறையவேயில்லை.

Image result for அனல் காற்று

அடுத்த 24 மணி நேரம் வரை இதே நிலைதான் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர்,பெரம்பலூர், நாகப்பட்டினம், கரூர், திருச்சி, மதுரை ஆகிய  மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது.

 

இதனால் அந்த மாவட்ட மக்கள் பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், அப்படி வெயில் கொளுத்தும் நேரத்தில் சென்றால் வெப்ப பாதிப்பு வரக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே சமயத்தில் கோவை, தேனி,நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Image result for 105 degree heat

சென்னையை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், பகல் நேர வெப்பநிலை 105 டிகிரி பாரன்ஹீட் வரை உயரக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Image result for காற்றழுத்த தாழ்வு நிலை

மேலும்  அடுத்த நான்கு அல்லது ஐந்து நாட்களில் வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும் இதன் பின்னர் வட தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.