நடைபெற்று தீவிர வாகன சோதனை…. கஞ்சா மற்றும் துப்பாக்கி பறிமுதல்…. கைது செய்த போலீஸ்….!!!

இருசக்கர வாகனத்தில் கஞ்சா மற்றும் பயங்கர ஆயுதங்களை கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுப்பம் பகுதியில் சிப்காட் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது துணியால் மறைக்கப்பட்ட நீளமான பொருள்களுடன் ஆந்திராவிலிருந்து இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்து கொண்டிருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் நாட்டுத்துப்பாக்கி உட்பட பயங்கர ஆயுதங்கள் மற்றும் கஞ்சா ஆகியவற்றை கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் தேடி வரப்பட்ட பழைய கொலைக் குற்றவாளிகளான நடராஜ், சரண்ராஜ், அருண்குமார் ஆகிய 3 பேர் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்ததோடு இரு சக்கர வாகனம் மற்றும் பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *