“தறி கெட விடமாட்டோம்” கமல்ஹாசனின் அமெரிக்க பிசினஸ்…. அவரே கூறிய தகவல்….!!

கமல்ஹாசன் ஆடை வணிகத்தை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் கமல்ஹாசன். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ”விக்ரம்” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இதனையடுத்து, கமல்ஹாசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும்  தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், இவர் புதிதாக ஆடை வடிவமைப்பு வணிகத்தில் இறங்க இருக்கிறார். இதனை, கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், ”தறி கெட விடமாட்டோம். நன்னூல் காப்போம்” என தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *