“எங்களுக்கு பிரதமர் பதவி இல்லயென்றாலும் பரவாயில்லை” பா.ஜ.கவை ஆட்சியமைக்க விடமாட்டோம் – குலாம்நபி ஆசாத்.!!

பா.ஜ.க இல்லாத ஆட்சியை கொண்டு வருவோமென  ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.

மக்களவை  தேர்தல் 7 கட்டமாக  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு  6 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இறுதி கட்ட தேர்தல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிந்து  வாக்கு பதிவு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே  உள்ள நிலையில் யார் ஆட்சி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் பலமாக எழும்பியுள்ளது. இதற்கிடையே  நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று  பா.ஜ.க.வும், காங்கிரசும் உறுதியுடன் கூறி வருகின்றன.

Image result for பா.ஜ.க. மற்றும்  காங்கிரஸ்

இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் பேசியதாவது “மோடி மீண்டும் பிரதமராக முடியாது . பா.ஜ.க மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி இல்லாத ஆட்சியே அமையும். நான் என்னுடைய   அனுபவத்தின் அடிப்படையில் தேசம் முழுவதும் நடந்துள்ள  நிலையை கருத்தில் வைத்து சொல்கிறேன் . பா.ஜ.க 2-வது முறை ஆட்சி அமைப்பதற்கு  வாய்ப்பு இல்லை.

Image result for We will not be prime minister but we will not let the BJP to rule - Ghulam Nabi Azad!

பா.ஜ.க தங்களின் செல்வாக்கில் 125 தொகுதிகளுக்கு மேல் இழக்கும் வாய்ப்புள்ளது.  வேலையின்மை, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட பிரச்சினைகளால் நாடு மிகப் பெரிய பாதிப்பை சந்தித்து  விட்டது. ஏழை மக்களுக்கு  இந்த அரசு எதுவும்  செய்யவில்லை. பா.ஜ.க வின் கொள்கை மற்றும் வெறுப்பு அரசியல் கண்டிப்பாக தோல்வியில் முடியும்.  எங்களுக்கு பிரதமர் பதவி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, பா.ஜ.கவை  ஆட்சியமைக்க விடமாட்டோம்” என்று ஆசாத் கூறினார்.