“கொரோனா பரவல் அதிகரிப்பு”…. தமிழக அரசு அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அவசர ஆலோசனை…!!!

இந்தியாவில் சமீப காலமாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அண்மையில் அனைத்து மாநில சுகாதாரத துறைக்கும் கடிதம் எழுதி அனுப்பியது.

இந்நிலையில் இன்று மாலை தமிழக அரசு அதிகாரிகளோடு மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்த இருக்கிறார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது கொரோனா பரிசோதனை, மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் போன்றவற்றை குறித்து ஆலோசிக்கலாம் என்று கூறப்படுகிறது.