ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பழனிச்சாமி அணி வேட்பாளரை தற்போது அதிமுக அறிவித்திருக்கிறது. பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக என்பதற்கு பதிலாக தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்றும் தற்போது பேரனரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இடைத்தேர்தலில் எடப்பாடி அணிக்கு ஆதரவு தர பாஜக முற்பட்டதா ? இல்லையா ? என்ற கேள்விக்கு விடை கிடைப்பதற்கு முன்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த அதிமுக தற்போது கூட்டணியில் இருந்து வெளியேறி புதிய கூட்டணி அமைத்துள்ளது.
ஈரோடு இடைத்தேர்தலுக்காக அதிமுக அமைத்துள்ள தேர்தல் பணிமனையில் பாஜக பெயரோ, கொடியோ இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி, அமித்ஷா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்களின் படங்களும் இதில் இடம்பெறவில்லை. பாஜகவின் நிலைப்பாடு எங்கள் நிலைப்பாடு என அறிவித்த ஜான்பாண்டியன், AC சண்முகம் ஆகியோரின் படங்களும் இதில் இடம் பெறவில்லை.
அதிமுகவின் நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணியின் செயல்பாடுகளுக்கு உரிய நேரத்தில் பதில் தரப்படும் என தெரிவித்துள்ளார்.