எங்களுக்கு வகைவகையான தோசை வேணும்…. ஸ்ருதி ஹாசனிடம் ரசிகர்கள் ஆர்டர்…!!

நடிகை ஸ்ருதி ஹாசனிடம் ரசிகர்கள் வகைவகையான தோசைகளை ஆர்டர் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். இவர் நடிப்பில் வெளியான கிராக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து ஸ்ருதிஹாசன் தற்போது விஜய் சேதுபதியின் லாபம் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வபோதுதான் எடுக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தோசை சுடும் வீடியோ ஒன்றை தற்போது பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஸ்பெஷல் தோசை, முட்டை தோசை என வகைவகையான தோசையை செய்து கொடுங்கள் என்று ஆர்டர் செய்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CNAKgsIHzM5/