நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தை விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்ட அம்புலன்ஸ் டிரைவர் குழந்தைகளை விற்றுள்ளோம் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

விசாரணையில் நர்சாக பணிபுரிந்த அமுதவள்ளி 2012-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றதும், அதன்பிறகு ஏழை குடும்ப பெண்களின் குழந்தைகளை வாங்கி, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விற்பணை செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த நர்ஸும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரிக்க ஒரு மருத்துவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இது தொடர்பாக வாழவந்திநாடு அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றும் முருகேசன் மற்றும் செவிலியர் பர்வின் ஆகிய இருவரையும் போலீஸ் கைது செய்துள்ளது. மூன்றாவது நாளாக விசாரணை நடந்து வரும் நிலையில் டிரைவர் முருகேசன் கொல்லிமலை பகுதியில் 10 குழந்தைகளை வாங்கி அமுதாவிடம் விற்றதாக போலீசிடம் கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 3 பெண்களிடமும் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.