உற்பத்தியாளர்கள் கேட்டுக் கொண்டதால்தான் பாலின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சி முகமானது காஞ்சிபுரம் மாமல்லபுரத்தில் இன்று தொடங்கியது. மூன்று நாட்களுக்கு மேல் இந்த பயிற்சி நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழாவில் அமைச்சர் செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,

மாணவர்கள் எளிதாக கணிதத்தை கற்றுக் கொள்ளும் வகையில் மிக விரைவில் தமிழகம் முழுவதும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். அவரை தொடர்ந்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பால் விலை குறித்து விளக்கமளித்துள்ளார் அதில், கொள்முதல் விலையை உயர்த்த விட்டால் பால் வழங்க முடியாது என்று உற்பத்தியாளர்கள் கூறியதால் தான் விலை உயர்த்தப்பட்டதாக அவர் கூறினார்.