நாங்கள் யாரையும் சவாலாக நினைக்கவில்லை என்று வி.பி கலைராஜன் ஸ்டாலின் சந்தித்து திமுக_வில் இணைந்தது குறித்து தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் TTV.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கட்சியின் கொள்கைக்கும் , கோட்பாடுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்த வி.பி கலைராஜன் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கபடுவதாக அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து வி.பி கலைராஜன் திருச்சி_யில் இருந்த முக.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக_வில் இணைந்தார்.

இந்நிலையில் இது குறித்து திமுக.தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில் , நாங்கள் யாரையும் சவாலாக கருதவில்லை , எங்களுடைய சவால் எல்லாமே மத்தியில் இருக்கக்கூடிய பாசிச ஆட்சியையும் , மாநிலத்தில் இருக்கக்கூடிய எடுபிடி ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம் . அதைத்தான் நாங்கள் சவாலாக ஏற்றுக் கொண்டுள்ளோம் . நேற்று பிரசாரத்தில் தொடக்கத்திலேயே மிகுந்த எழுச்சியை மக்களிடையே காண முடிந்தது . தேர்தலில் நிச்சயமாக உறுதியாக மத்தியிலும் , மாநிலத்திலும் ஆட்சியை அகற்றுவதற்கு எங்களை விட பொதுமக்கள் மிகுந்த ஆவலாக இருக்கிறார்கள் . அந்த பணியை செய்ய காத்திருக்கின்றோம் என்றும் முக.ஸ்டாலின் தெரிவித்தார்.