பாதுகாப்பாக இருங்கள்… “வீட்டில் கிரிக்கெட் விளையாடும் பாண்டியா பிரதர்ஸ்”..!

கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி குருணால் பாண்டியா மற்றும் ஹர்திக் பாண்டியா வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உறைந்து இருக்கின்றனர். இந்த வைரஸ் நாளுக்குநாள் மக்களை கொன்று குவித்து கொண்டே வருகிறது. இதுவரை சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டும், 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். இந்தியாவிலும் கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்த கொடிய வைரசை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர்களான குருணால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா (அண்ணன், தம்பி) ஆகியோர் இணைந்து ட்விட்டர் வீடியோ மூலம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Pandya brothers urge everyone to stay at home to contain COVID-19 ...

குருணால் பாண்டியா தனது ட்விட்டர் பதிவில், நாங்கள் அனைவரும் வீட்டிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறோம், தயவு செய்து நீங்கள் அனைவரும் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் வீட்டில் இருங்கள் என்று பதிவிட்டு, வீடியோவையும் இணைத்துள்ளார்.

அந்த வீடியோவில், பாண்டியா சகோதரர்கள் இணைந்து குடும்பத்தோடு வீட்டிற்குள் கிரிக்கெட் விளையாடுகின்றனர். அண்ணன் குருணால் பாண்டியா பேட்டிங் செய்ய தம்பி ஹர்திக் பந்து வீசுகிறார். சிறிது நேரத்தில், இருவரும் இணைந்து பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே பாதுகாப்பாகவும், முன்னெச்சரிக்கையாகவும் இருங்கள் என்றும், கொரோனாவை நாம் இணைந்து விரட்டுவோம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *