நாங்க ரொம்ப கஷ்டப்படுறோம்… கோரிக்கை விடுத்த சிறுவன்… உதவி செய்த மாவட்ட ஆட்சியர்…!!

திருவாரூர் மாவட்டத்தில் இணையம் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் நலத்திட்ட உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்த மாற்றுதிறனாளி சிறுவனுக்கு ஆட்சியர் நலத்திட்ட உதவிகளை செய்து கொடுத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் உள்ள ஆணைக்குப்பத்தில் மாற்றுத்திறனாளியான ஜெயதேவ்(12) என்ற சிறுவன் வசித்து வந்துள்ளான். இந்நிலையில் சிறுவனின் குடும்பத்தினர் வாழ்வாதாரம் இழந்து மிகவும் அவதிப்பட்டு வருவதால் இணையதளம் மூலம் மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணனுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் சிறுவனை நேரில் அழைத்து நல திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். இதனையடுத்து சிறுவனுக்கு உடலில் காயங்கள் உள்ளதால் தூங்க வசதியாக தண்ணீர் படுக்கை, சக்கர நாற்காலி மற்றும் சிறுவனின் தாயார் தையல் தொழில் செய்து வருவதால் அவருக்கு மோட்டார் பொருந்திய தையல் மெஷின் ஆகிய ஆகியவை வழங்கியுள்ளார். அப்போது மாவட்ட மாற்றுதினாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் உடனிருந்துள்ளார்.