மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து அதிகமான விலையை அரசு நிர்ணயித்துள்ளது என்று தமிழக முதல்வர் தெரிவித்தார்.
சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பால் விலை உயர்வு குறித்து விளக்கம் அளித்தார். அதில் பாலின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்ற நீண்ட நாள் கோரிக்கையை இப்போது தான் அரசு செய்துள்ளது. ஏற்கனவே பால் உற்பத்தியாளர்களின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்று எதிர்கட்சி தலைவரும் சட்டசபையில் வலியுறுத்தினார் என்று முதல்வர் விளக்கம் அளித்தார்.
