சந்து பொந்து சென்று மக்களுக்கு தண்ணீர் கொடுக்கிறோம்… அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி ..!!

சந்து பொந்து எல்லாம் சென்று மக்களுக்கு தண்ணீர் வழங்கி வருகின்றோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை வீரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் மீன்வளத்துறைஅமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.இந்த ஆண்டுக்கான  100% பருவ மழையில் 40% தான் மழை பெய்துள்ளது. 60 சதவீதமான மழை இல்லை. பாதிக்குமேல் பருவமழை கிடையாது. இந்த சூழ்நிலையில் வைத்துக்கொண்டு அரசு சமாளித்து வருகிறது.

அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி க்கான பட முடிவு

எனவே யாரும் இதில் அரசியல் செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். இயற்கை கை கொடுக்க முடியாத நிலையில் கூட அதை மக்களுடைய எதிர்பார்ப்புகள் 100% சதவீதத்தில்  80  சதவீதம் அளவுக்கு மழை இல்லாத சூழலை நிறைவேற்றுகின்றோம்.சந்து பொந்தெல்லாம் தண்ணி கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். நவம்பர் வரை மக்களின் தண்ணீர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இருக்கின்றோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.