நாங்கள் அனைவருமே காவலாளிகள்…… மோடியை போல பெயர் மாற்றிய பிஜேபியினர்…!!

பாஜகவினர் பலரும் ட்வீட்_டரில் தங்களுடைய பெயரை காவலாளி என்று மாற்றியுள்ளனர்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடக்கி மே 19_ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றது . தேர்தல் வெற்றிக்காக தொடர்ந்து தேசிய கட்சிகள் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்திற்க்காக அவரின் ட்வீட்_டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். மேலும்  நானும் காவலாளி தான் என்கின்ற தலைப்பில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டார். அதில் உங்கள் காவலாளி தேசத்துடன் துணை நிற்கின்றான் , இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக போராடும் நாம் அனைவருமே காவலாளி தான் என்று பதிவிட்டார்.

இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி காவலாளி ஒரு திருடன் என்று பதிவிட்டார்.ராகுலின் இந்த ட்வீட்_டுக்கு பதில் கொடுக்கும் வகையில் , பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் காவலாளி நரேந்திர மோடி என்று பெயரை மாற்றினார். மேலும்  பாஜக தேசிய தலைவர் அமித் ஷா , மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் , பியூஸ் கோயல் மற்றும் ஹர்ஷ்வர்தன் ,  மத்திய பிரதேச முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜகவினர் பலரும்  ட்வீட்_டரில் தங்களுடைய பெயருக்கு முன்பாக காவலாளி என்று சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.