வாழ்க்கையில் வெற்றியடைய இதனை பின்பற்றுங்கள் ….

வெற்றியோடு வீட்டிற்கு எப்படி போகணும் .நேராகப் போய் வலதுபக்கம் திரும்பினால் ஒரு தோல்வி வரும் ,அங்க இருந்து இடது பக்கம் போனால் பெரிதாக ஒரு துரோகம் வரும் ,கொஞ்சம் தூரம் போய் ஒரு சுற்று வட்டம் வந்தால் அங்கு கடன் எனும் பெரிய பள்ளத்தாக்கு இருக்கும் .நிறைய பேர் அந்த பள்ளத்தாக்கில் விழுந்து கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். நாம் அதில் விழுந்திடாமல் கவனமாக செல்ல வேண்டும். பள்ளத்தாக்கு அருகில் ஏமாற்றம் என்ற சிக்னல் இருக்கும் .

அதைத் தாண்டி போனால் போட்டி ,பொறாமை என்ற வேகத் தடைகள் வரும். அதை தாண்டி சென்றால் ஒரு மேடு வரும் அதைத் தாண்ட கொஞ்சம் கஷ்டம் தான் .பொறுமையோடு விடாப்பிடியாக இருந்தால் உச்சியை அடையலாம். சில பேர் மலை உச்சிக்கு அருகில் போய்விட்டு ஐயோ! இதுக்கு மேலே ஏற முடியவில்லை என்று திரும்பிவிடுவார்கள். ஏனென்றால் பாதை மிகவும் கரடு முரடாக இருக்கும். ஆனால் நீங்கள் விடாமுயற்சியோடு உச்சிவரை சென்றால் வெற்றி நிச்சயம்!!

இதிலிருந்து நாம்உ ணர்வது வெற்றியடைய மிகவும் கடினம் என்பது .மற்றவர்கள் எல்லாரும் வெற்றி அடைகிறார்கள் நாம்  தோல்வி அடைகிறோம் என்று கவலைப்படாதீர்கள் .நாம் சுய முயற்சியோடு வெற்றியடைய நினைத்தால் நாம் சோதனையிலும் ,துன்பத்திலும் விடாமுயற்சிஉடன் கடவுளை வழிபட வேண்டும்  கடவுளின்  வழிகாட்டல்கள்  படி நடக்க வேண்டும்