பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு … விவசாயிகள் மகிழ்ச்சி!!

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 60  அடியாக அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

பவானி  சாகர்  அணைக்கு  தொடர்ந்து  நீர்வரத்து அதிகரித்துள்ளதால்  நீர்மட்டம்  அறுபது அடியை  எட்டியுள்ளது. பவானிசாகர்  அணையின் மூலம் ஈரோடு , கரூர் ,திருப்பூர் ஆகிய  மாவட்டங்களின்  2,47,000 ஏக்கர்  நிலங்கள்  பாசன வசதி  பெறுகின்றன .பருவமழை  பெய்யாத காரணத்தால்  அணையில்  நீர் இருப்பு  குறைவாகவே  இருந்த நிலையில்  கடந்த  மூன்று  நாட்களாக  அணையின்  நீர்  பிடிப்பு  பகுதிகளான  வட  கேரளா மற்றும்  நீலகிரிமலைப்  பகுதிகளில் பரவலாக  மழை  பெய்து  வருவதால்  பவானி  மற்றும்  மாயாற்றில்   நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அணையின்  நீர்மட்டம் இரண்டு  நாட்களில் இரண்டு அடியாக  உயர்ந்துள்ளது. காலை நிலவரப்படி அணைக்கு  வினாடிக்கு  3, 796 கன  அடியாக இருந்த நிலையில் நிர்மட்டம்  60.23 அடியாகவும் , நீர்  இருப்பு 7.3 டிஎம்சி ஆகவும்  உள்ளது.குடிநீர் தேவைக்காக பவானி ஆறு மற்றும் கீழ் பவானி  வாய்க்காலில் இருந்து  வினாடிக்கு  205 கனஅடி  தண்ணிர் திறந்து விடப்படுட்டுள்ளது.அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள்  மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *