”மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு” நீர் மட்டம் 46.49 அடியாக உயர்வு …!!

கர்நாடக அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள நீரின் அளவு அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

கர்நாடகாவின்காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் பருவமழையால் K.R.S  மற்றும் கபினி அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8, 400 கன அடியிலிருந்து 8,900 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Image result for மேட்டூர் அணை

மேலும் நீரின் வரத்து அதிகரித்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 46.49 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 15.6 7 டிஎம்சியாக இருப்பு உள்ள நிலையில் வினாடிக்கு 1000  கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.