தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி… ஒரு வாரமாக ஹோட்டல் மூடல்…!!

சென்னை நுங்கப்பாக்கத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் ஒரு வரமாக ஹோட்டல் மூடப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.

சென்னை புறநகர் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வரக்கூடிய இந்த சூழ்நிலையில் பல இடங்களில் ஓட்டல்களிலும் உணவு சமைப்பதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டல் கடந்த ஒரு வாரமாக முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. இந்த ஓட்டலில் ஒரு வாரமாக எந்த உணவும் சமைக்கவில்லை. இதற்கு முதன்மையான காரணம் குடிநீர் காரணம் தட்டுப்பாடு என்று தெரிய வந்துள்ளது.

Image result for தண்ணீர் தட்டுப்பாடு

கடந்த 4 மாதத்திற்கு முன்பு எல்லாம் ஹோட்டல்களில் தண்ணீர் தேவைப்படும் என்றால் சென்னை குடிநீர் வாரியம் மூலமாக தண்ணீர் வாங்கப்பட்டும் ,  தனியார் குடிநீர் கேன்கள்  வாங்கப்பட்டும்  உணவு சமைப்பதற்கான ஏற்பாடுகள் இருந்தன ஆனால் தற்போது குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டிருக்கக் கூடிய சூழலில் சென்னை குடிநீர் வாரியம் மூலமாக ஹோட்டலுக்கு தண்ணீர் வழங்கப்படவில்லை.  எனவே தனியார் குடிநீர் லாரிகளை நம்பியே ஹோட்டல்கள் செயல்பட்டு வருகின்றது.

ஒரு ஓட்டலுக்கு குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 3000 லிட்டர் முதல் 5 ஆயிரம் லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது. தொடர்ந்து தண்ணீர் தட்டுப்பாட்டால் தனியார் குடிநீர் லாரிகளில் இருந்தும் தண்ணீர் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதால் வரக்கூடிய வாடிக்கையாளருக்கு உணவு சமைத்துக் கொடுப்பது பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் நுங்கம்பாக்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஹோட்டல் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக முழுமையாக மூடப்பட்டுள்ளது.இந்த ஓட்டல்  ஒருவாரத்திற்கு மேலாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *