விவாகரத்து பெற்ற மனைவி…. காவலாளி தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அவ்வையார் பாளையத்தில் ஜோதிமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேட்டைக்காரன் கோவிலில் இருக்கும் தனியார் மில்லில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்று தனியாக சென்று விட்டார். இதனால் ஜோதிமணி தனது தாய் ஈஸ்வரியுடன் வசித்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜோதிமணி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர் ஜோதிமணி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply