லண்டனில் குடியேறி இருக்கும் கனட மக்கள்  எச்சரிக்கை….!!

லண்டனில் குடியிருக்கும் கனட மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

பிரிட்டனில் ப்ரிக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக நாளுக்கு நாள் போராட்டம் அதிகரிப்பதால் லண்டனில் குடியேறி இருக்கும் கனடா நாட்டு மாக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமென்று கனட அரசு கோரிக்கை வைத்துள்ளது. லண்டனில் அரசு கட்டடங்களுக்கு அருகாமையில் ப்ரிக்சிட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்தே கனட அரசு தங்கள் குடிமக்களுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பிரதமர் தெரேசா மே க்கான பட முடிவு

மேலும் கனட அரசு தெரிவிக்கையில் , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வன்முறையில் இறங்க வாய்ப்பு உள்ளதாகவும் , அதனால் குறிப்பிட்ட பகுதியை கன்னட மக்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். பிரிட்டன் பிரதமர் தெரேசா மே முன்வைக்கும் வைக்கும் உடன்படிக்கையானது மூன்று முறையும் நிராகரிக்கப்பட்ட நிலையில் ப்ரிக்சிட் போராட்டமானது மேலும் பல நாள் நீடிக்கலாம் என கனட நாட்டின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .