அஷ்வினை கிண்டல் செய்யும் விதமாக வார்னர் செய்த காரியம்…!!

 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும்  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் அஷ்வின் பந்தை வீசும் போது  கிண்டல் செய்யும் விதமாக வார்னர் பேட்டை கிரீசுக்குள் வைத்திருந்தார்.  

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும்  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி மொஹாலி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில்  டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சை தீர்மானித்தது.  இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 20  ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழந்து 150 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 19.5 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து  151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் போது  7வது ஓவரை கேப்டன் அஷ்வின் வீசினார். அந்த ஓவரில் அஷ்வின் பந்துவீசும் போது, டேவிட் வார்னர் ரன்னர் திசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரின் கையில் இருந்து பந்து முற்றிலுமாக செலுத்தும் வரை, மிகவும் எச்சரிக்கையாக அவர் வெளியே நின்றாலும் பேட்டை க்ரீஸில் நீட்டியபடி வார்னர்  வைத்திருந்தார் . ஒருவகையில் இந்த செயல் அஷ்வினை, டேவிட் வார்னர் கிண்டல் செய்யும் விதமாக இது அமைந்தது . இந்த  புகைப்படம் உடனடியாக ட்விட்டரில் கிரிக்கெட் ரசிகர்கள் பலராலும் பகிரப்பட்டது. அந்த படத்தை பார்க்கும் போது சற்று நகைச்சுவையாக இருக்கும்.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நடைபெற்றது  போல், இந்தப் போட்டியிலும் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டதாக  ஒரு கமெண்ட் செய்திருந்தார். முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும்  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில், ஜாஸ் பட்லரை ‘மன்கட்’ முறையில் அஷ் வின் அவுட் செய்தார். அஸ்வினின் இந்த செயல்  சமூக வலைதளங்களில் அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டது. பெரும் சர்ச்சையையூம் ஏற்படுத்தியது.   கிரிக்கெட் விதிப்படி இது சரியாக இருந்தாலும் இந்த “மன் கட்” முறையில் அவுட் செய்வது சரியல்ல என்றும் , விதியே அதனை சரி என்று கூறும் போது அதில் எந்த தவறேதும் இல்லை என்றும் இரு தரப்பு நியாயங்கள் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.