அதிக குழந்தைகள் வேணாம் … சலுகைகள் ரத்து ..! மக்களுக்கு எச்சரிக்கை.!!

இந்தியாவின்  மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் புதிய மசோதாவை காங்கிரஸ் மூத்தத் தலைவர்  அபிஷேக் மனு சிங்வி மாநிலங்களவையில் தாக்கல்செய்யவுள்ளார்.

மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதா, 2020  என்ற பெயரில் தாக்கல்செய்யப்படவுள்ள , இந்த மசோதாவை  மாநிலங்களவையில் அறிமுகப்படுத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

மேலும், வறுமைக் கோட்டிற்குகீழ் வாழும் தம்பதி இரண்டு அல்லது ஒரு குழந்தை மட்டுமே வைத்திருந்தால் அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அளவிற்கு ஊக்கத்தொகை அளிக்கலாம் எனவும் இந்த மசோதாவில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணமான தம்பதிகளுக்கு, ஒற்றை குழந்தை ஒரு பையனாக இருந்தால் ஒரு முறை மொத்த தொகை ரூ.60,000 அல்லது ஒற்றைபெண்  குழந்தையாக  இருந்தால் ரூ .1 லட்சம் கொடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மசோதாவிற்கு , இணங்காதவர்களுக்கு ஊக்கத்தொகை, தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப்பது, அரசு வேளைகளில் பதவி உயர்வு பெறுவது, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அரசாங்க மானியத்தை பெறுவதை தடுப்பதற்கும் அல்லது அரசு வேலைகளுக்கு விண்ணப்பிப்பது ஆகியவை அடங்கும் என்று காங்கிரஸ் தலைவர் கூறினார்.