இரவு தூங்கும் முன் எளிதான சில முறைகளை பின்பற்றி நமது முகத்தினை பளபளக்கச்செய்ய முடியும்.
இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டருடன், இரண்டு ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து நன்றாக கலந்து சருமத்தில் அப்ளை செய்து பத்து நிமிடம் கழித்து சருமத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர சரும செல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கப்பட்டு சருமம் அழகாக மாறும் .

இரவு தூங்குவதற்கு முன் எலுமிச்சை சாறுடன், சிறிதளவு தேன் கலந்து சருமத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.இவ்வாறு தினமும் இரவில் செய்து வந்தால் சருமம் சிவப்பாக இருக்கும்.
இரவு தூங்குவதற்கு முன், வெள்ளரிச்சாறில் சிறிதளவு காய்ச்சாத பால் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.பின்பு குளிர்ந்த நீரில் சருமத்தை கழுவ வேண்டும். இதனால் சருமம் புத்துணர்ச்சி பெறும் .
உருளைக்கிழங்கில் சாறு எடுத்து அவற்றை சருமத்தில் அப்ளை செய்து, பின்பு ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்து பின் சருமத்தை கழுவ வேண்டும்.இவ்வாறு செய்வதனால் சருமம் பளபளப்பாகி ஜொலிக்கும் .தயிருடன் சிறிதளவு கடலை மாவு கலந்து சருமத்தில் தடவி மசாஜ் செய்து வர என்றும் சருமம் பொலிவுடன் இருக்கும் .