சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூடல்வாடி கிராமத்தில் பலராமன் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியிலுள்ள புருஷோத்தமன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பழைய சுவர் இடிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பலராமன் மீது சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்துள்ளார்.
இதனையடுத்து உடன் பணிபுரிந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பலராமன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.