நில்லுங்க..! நில்லுங்க..! போகாதீங்க ? மக்களிடம் கெஞ்சிய அதிமுக_வினர்…. !!

மான்னர்குடியில் முதல்வர் பிரசாரத்திற்கு வந்த போது கூடியிருந்த மக்கள் வீட்டுக்கு கலைந்து சென்றது அதிமுக_வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது 

மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில் அதிமுக , திமுக என 5 முனை போட்டியாக தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் பழனிசாமி மன்னர்குடியில் தேர்தல் பிரசாரம் செய்த போது பொதுமக்கள் கண்டுகொள்ளாமல் சென்றது அதிமுக_வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Image result for முதல்வர் பழனிசாமி பிரசாரம்

தமிழக முதல்வர் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றார். இந்நிலையில் மன்னார்குடி பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில்   தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது அங்கு கூடியிருந்த மக்கள் அவர் அவர்கள் வேலையை பார்ப்பதற்கு கலைந்து சென்றனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிமுக_வினர் மக்களை செல்லாதவாறு கைகளை சங்கிலி போன்று பிடித்துக்கொண்டு மக்கள் செல்வதை தடுத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.