இல்லத்தரசிகளுக்கு ஊதியம்… இந்தியாவிற்கு வழிகாட்டும் தமிழகம்… கமல் பெருமிதம்…!!!!!!

சட்டசபையில் இன்று பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையில் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் உரிமை தொகை வழங்கப்படும். இந்தத் தொகை வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். இந்நிலையில் இல்லத்தரசிகளை போற்றுவதில் தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டுவதாக மநீம தலைவர் கமல்ஹாசன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் குறித்து அவர்  கூறியதாவது, இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்னும் கனவை முன்னெடுத்த முதல் இந்திய கட்சி மநீம.  புரட்சிகரமான இந்த திட்டம் தமிழகத்தில் குடும்பத் தலைவிகளின் உரிமை தொகையாக உருவெடுத்து இருப்பதில் மகிழ்கிறேன். வரலாற்று சிறப்புமிக்க இந்த அறிவிப்பிற்காக முதல்வர் ஸ்டாலினை பாராட்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.