உச்சக்கட்ட கொடூரம்…. 64 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் நடவடிக்கை…. பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டின் நியூஜெர்சியை சேர்ந்த 64 வயதான மூதாட்டி ஒருவர், இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்துள்ளார். இதையடுத்து புதுச்சேரியில் 3 நாட்கள் தங்கி சுற்றிப் பார்த்துள்ளார். இதற்கிடையில் புஸ்சி வீதியிலுள்ள ஒரு கலைப் பொருட்கள் விற்கும் கடைக்கு மூதாட்டி சென்றுள்ளார். அங்கு கடையின் உரிமையாளருடன் மூதாட்டிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டனர்.

இதற்கிடையில் இருவருக்கும் இடையிலான நட்பு ஆழமானது. இந்த நிலையில் சென்ற வாரம் சுய்ப்ரேன் வீதியிலுள்ள ஒரு ஹோட்டலில் மூதாட்டி தங்கினார். அன்று இரவு நண்பரான அந்நபர் மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்து உள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்த அந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.