வாக்கு பதிவு இயந்திரம் கோளாறு…. திரும்பி செல்லும் மக்கள்…!!

பண குடியில் 31வது வாக்கு சாவடியில்  வாக்கு பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக வாக்களிக்க முடியாமல் பொது மக்கள் திரும்பி செல்கின்றனர்.  

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தமிழகத்தில் சில இடங்களில் வாக்கு பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக வாக்கு செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

Image result for Voting machine

இந்நிலையில் நெல்லை, பண குடியில் 31 வாக்குகள் மட்டும் பதிவான நிலையில் 31ஆவது வாக்கு சாவடியில் வாக்கு பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக  மக்கள் வாக்களிக்க முடியாமல் அவதிப்பட்டனர். வாக்களிப்பதற்கு மாற்று இயந்திரம் இல்லாததால் மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றாமல்  திரும்பி சென்றனர்.