“13 ஆவணங்களை வைத்து வாக்களிக்கலாம்” தலைமை தேர்தல் அதிகாரி தகவல்..!!

வாக்காளர் அடையாள அட்டை  மட்டுமின்றி  அரசு அங்கீகரித்த 13 ஆவணங்களை வைத்து வாக்களிக்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.  

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் இரண்டாம் கட்ட வாக்கு பதிவாக நடைபெறுவதாக ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும்  அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில்  வாக்கு நிலையில் பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

Image result for வாக்கு பதிவு

அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் இந்த முறை 5.99 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்கும் வகையில்  67,720 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு  அதில் 1,50,302 வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். மேலும் 94, 653 விவி பேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட  உள்ளன. பெண்களுக்கான தனி வாக்கு பதிவு மையம் ஒரு தொகுதிக்கு ஓன்று அமைக்கப்படும். வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டை மட்டுமின்றி அரசு அங்கீகரித்த 13 ஆவணங்கள் கொண்டு சென்று வாக்களிக்கலாம் என்று சத்ய பிரதா சாஹு தெரிவித்தார்..