என் மனைவிக்கு ஓட்டு போடுங்க….!! கத்தியை காட்டி மிரட்டி வாக்கு சேகரித்த கணவர்…. காஞ்சியில் பரபரப்பு….!!!

மனைவிக்கு வாக்களிக்குமாறு கத்தியை காட்டி மிரட்டி கணவர் வாக்கு சேகரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் பூபாலன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி.எஸ்.டி பிரிவு துணைத் தலைவராக இருந்துள்ளார். இவரது மனைவி தனலட்சுமி ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 1-வது வார்டில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனையடுத்து பூபாலன் தனது மனைவியை சுயேச்சையாகப் போட்டியிட களமிறக்கியுள்ளார். இதனை தொடர்ந்து வேட்புமனு பரிசீலனை முடிந்து தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது.

எனவே அனைத்து கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பூபாலன் 1-வது வார்டில் உள்ள மக்களிடம் தனது மனைவி தனலட்சுமிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர் பூபாலன் கையும் களவுமாக கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *