வோடாபோனின் இந்த ரூ. 129 சலுகை மாற்றத்தினால் ஏற்கனவே ரூ. 129 சலுகை வழங்கி வரும் ஏர்டெல் நிறுவனத்திற்கு போட்டியாக அமைந்துள்ளது. ஏர்டெல் ரூ. 129 சலுகையில் 2 G .P. டேட்டாவினை 28 நாட்களுக்கு வழங்கி வருகிறது. ஏர்டெல் சலுகையிலும் அதே போன்று டேட்டா மட்டுமின்றி அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 S.M.S வழங்கப்படுகிறது.

வோடபோன் அறிவித்திருக்கும் இந்த புதிய மாற்றம் வோடபோன் சேவை கிடைக்கும் அனைத்து வட்டாரங்களுக்கும் பொருந்தும். இதற்கு முன்னதாக வோடபோன் நிறுவனம் ரூ. 129 சலுகையில் பயனாளர்களுக்கு 1.5 G .P. டேட்டா மட்டுமே வழங்கி வந்தது. ஆனால் தற்சமயம் பயனர்களுக்கு 500 M.P டேட்டா கூடுதலாக கிடைக்கிறது. டேட்டா, வாய்ஸ் கால், S.M.S. பலன்களுடன் வோடபோன் பிளே செயலி மூலம் லைவ் டி.வி., திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.