மாஸ்டர் படத்திற்கான இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாஸ்டர் படத்திற்கான இசை வெளியீட்டு விழா சென்னை லீலா பேலஸில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் இளைய தளபதி விஜய் அவர்கள் பேச்சைக் கேட்பதற்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சி முன் அமர்ந்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதற்கான காரணம் ஒவ்வொரு இசை வெளியீட்டு விழாவின் போதும் நடிகர் விஜய் மக்களுக்கு தேவையான விஷயம் குறித்தும், அரசியல் குறித்தும் பேசுவார். தற்போது அவருக்கு முன்பாக பேசிய படத்தின் வில்லனான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மக்களுக்கு தேவையான ஒரு அரசியலை பேசியுள்ளார்.அது என்னவென்றால்,
மதத்தை வைத்து பலர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். மதம் கடவுள் இவையாவும் மனிதனை காக்க கூடிய சக்தி கொண்டது அல்ல. அதற்கு உதாரணம் கொரோனோ வைரஸ் மனிதனை சக மனிதனால் மட்டுமே காப்பாற்ற முடியுமே தவிர கடவுள்களால் காப்பாற்ற முடியாது.
ஆகையால் இதனை புரிந்து கொண்டு மதத்தால் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அவ்வாறு பிரிவினையை ஏற்படுத்தும் நபர்கள், கும்பலுடன் தயவுசெய்து சேர வேண்டாம். மனிதம் தான் தேவை. மதம் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.