என்ன காரணமா இருக்கும்…. மர்மமான முறையில் வியாபாரி மரணம்…. போலீஸ் விசாரணை….!!

வியாபாரி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி கிராமத்தில் பூமி பாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முந்திரி வியாபாரம் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு மீனா என்ற மனைவியும், 1 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர். இந்நிலையில் குடிபோதைக்கு அடிமையாகிய பூமி பாலன் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இதனை அறிந்த அவரின் உறவினர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பூமி பாலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் பூமி பாலனின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரின் உறவினர்கள் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பூமி பாலனின் மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் இறந்தாரா இல்லை அவரை யாராவது கொலை செய்திருப்பார்களா என்று பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் தான் தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *