இவங்களலாம்…… கை கழுவிடுங்க….. விவேக் அட்வைஸ்….!!

சோப்பு போட்டு கை கழுவுவதை போல் வதந்தி பார்ப்பவர்களையும் கைகழுவ வேண்டும் என நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனோ வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் சூழ்நிலையில், நடிகர் விவேக் மீண்டும் மீண்டும் கொரோனோ குறித்து பல்வேறு நோய்களை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் அவர் பதிவு ஒன்றில் இவ்வாறு தெரிவித்தார். அதில்,

கொரோனோவை விட மிகப்பெரிய நோய் எதுவெனில் எதிர்மறை அவநம்பிக்கை தான். இந்த சூழல் நாம் அனைவரும் ஒன்றுபட்டு, உடலால் தனித்து இயங்க வேண்டும் இப்படியான சூழ்நிலையில் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவது போல்,  வதந்தி, பொய் செய்தி உள்ளிட்ட பதிவுகளை பரப்புவோரையும் சேர்த்து கை கழுவுவது நல்லது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.