விவசாயிகளே…. உரம் தொடர்பாக ஏதாவது புகாரா?…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….!!!!

உரம் தொடர்பான தகவல்களை பெறவும், புகார் தெரிவிக்கவும் மாநில அளவில் உர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் உத்தரவின்படி மாநில அளவில் உரம் தொடர்பான தகவல்களை பெறவும், புகார்களை தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளவும் உர உதவி மையம் சென்னை, வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே விவசாயிகள் தங்கள் புகார்களை வாட்ஸ் அப் செயலி மூலமாக பதிவு செய்துவிடலாம்.

இதனையடுத்து விவசாயிகள் தெரிவிக்கும் புகார்களை பதிவு செய்து உடனுக்குடன் தீர்வு அளிப்பதற்காக அலுவலர் ஒருவரும் தனியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆகவே வேளாண் பெருங்குடி மக்களும் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை 91 93634 40360 என்ற செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு வாய்மொழியாக மற்றும் வாட்ஸ் அப் செயலி மூலமாக தெரிவித்து பயனைடை கேட்டுக்கொள்ளப்படுகிறது.