“வீட்டுப்பாடம் செய்யாத சிறுமி” சிறை தண்டனை கொடுத்த நீதிமன்றம்….!!

அமெரிக்கா மிச்சிகன் மாகாண பகுதியில் வீட்டுப்பாடம் செய்ய தவறிய 15 வயது மாணவிக்கு சிறை தண்டனை அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றினால் அமெரிக்காவில் ஆன்லைன் மூலமாக பாடம் நடத்திக்  கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்க-ஆப்பிரிக்க இனத்தினை சார்ந்த கிரேஸ் என்ற 15 வயது சிறுமி வீட்டுப்பாடம் முடிக்க தவறியதால் சென்ற மே மாதத்தில் அச்சிறுமியை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இச்சம்பவத்தை எதிர்த்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கிரேஸ் என்ற சிறுமிக்கு ஆதரவாக பள்ளி மற்றும் நீதிமன்றம் அருகே நின்று போராட்டம் நடத்தினார்கள். இவ்வழக்கை விசாரணை செய்த ஓக்லாந்து குடும்ப நீதிமன்றம், இச்சிறுமி வீட்டு பாடத்தினை செய்யாமல் நன்னடத்தை விதியை மீறி இருப்பதாகவும், அவரின் மீது சாட்டப்பட்ட முந்தைய குற்றங்களை வைத்தும் கிரேஸ் இச்சமூகத்திற்கு அச்சுறுத்தல் என கூறி தீர்ப்பளித்தனர்.

இதனால் அம்மாணவிக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தினால் இவ்வழக்கானது மிக்சிகன் உயர்நீதிமன்றத்தில் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என அறிவித்துள்ளது. மேலும் தண்டிக்கப்பட இப்பெண் கருப்பு இனத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தினால் இந்த வழக்கிற்கு கூடுதல் கவனம் செலுத்தி இருப்பது முக்கியமானதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *