என்ன காரணமா இருக்கும்….? மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விஷம் குடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் மாரியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கருப்பசாமி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மாரியம்மாள் அவரது மகனான கருப்பசாமியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக மாரியம்மாள் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் மாரியம்மாள் திடீரென வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதனை பார்த்த உறவினர்கள் மாரியம்மாளை உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.