விஷாலின் 31-வது திரைப்படம்…. புதுமுக இயக்குனருடன் கூட்டணி…. வெளியான முக்கிய தகவல்…!!

முன்னணி நடிகர் விஷாலின் 31வது திரைப்படத்தை புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் தற்போது எனிமி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை மிர்னாலினியும், வில்லனாக நடிகர் ஆர்யாவும் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதை தொடர்ந்து விஷாலின் 31வது திரைப்படத்தை புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார். அதன்படி குள்ளநரிக்கூட்டம், தேன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக இருந்த து.ப.சரவணன் என்பவர் தான் விஷாலின் 31-வது திரைப்படத்தை இயக்க உள்ளார். மேலும் இவர் “எது தேவையோ அதுவே தர்மம்” என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார்.

விஷால் 31 பட போஸ்டர்

விஷாலின் இந்த படம் அதிகார பலம் படைத்தவர்களே எதிர்கொள்ளும் ஒரு சாமானிய நபரின் போராட்டத்தை குறிக்கும் என்று தெரியவந்துள்ளது. மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.