விஷால் படத்தில் இணைந்த இயக்குனர் செல்வராகவன்?…. விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

சுமார் 20 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். கடந்த ஆண்டு வெளியாகிய பீஸ்ட் மற்றும் சாணிக்காயிதம் போன்ற படங்கள் வாயிலாக ஒரு நடிகராக தன்னை உருமாற்றிக் கொண்டார் செல்வராகவன். இந்த 2 திரைப்படங்களிலும் அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதன்பின் இயக்குனர் மோகன்ஜி டைரக்டில் உருவாகி வரும் பகாசுரன் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் செல்வராகவன்.

இந்நிலையில் விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச் சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதோடு அண்மையில் தெலுங்கு நடிகர் சுனிலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என அவரது கதாபாத்திர போஸ்டரும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் செல்வராகனும் இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply