“பதவி ஆசை பிடித்தவர் விஷால் “நடிகர் ஆரி பரபரப்பு குற்றசாட்டு..!!

விஷாலுக்கு பத்தி ஆசை இருப்பதாகவும் அவரது பதவி ஆசியால் தான் இந்த தேர்தல் நடைபெற்று கொண்டு இருக்கிறது என்றும் நடிகர் ஆரி குற்றம் சாட்டியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு   சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7  மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் பல்வேறு திரைக் கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர்.

Image result for actor aari

இந்நிலையில் பல்வேறு தரப்பினர் இந்தத் தேர்தல் தேவையற்றது என்றும் பாண்டவர் அணியின் சார்பாக போட்டியிடும் விஷால் அவர்களுக்கு எதிரான கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து நடிகர் ஆரி அவர்கள் இதுகுறித்து கூறியதாவது விஷால் அவர்களுக்கு பதவி ஆசை இருப்பதாகவும் அவர் ஒருவரின் பதவி ஆசையால் தான் தற்போது இந்த தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் விஷால் அணியினர் கடந்த முறை நடைபெற்ற தேர்தலின் வாக்குருதிகளையே  இன்னும் நிறைவேற்றவில்லை என்றும் கூறியுள்ளார்.