“நடிகர் சங்க தேர்தல் இரத்து” உயர்நீதிமன்றத்தில் விஷால் மேல்முறையீடு …!!

நடிகர் சங்க தேர்தல் இரத்து செய்யப்பட்டத்தை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

வருகிற 23-ஆம் தேதி  எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தலில் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. ஆனால் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் இருந்த சிக்கலையடுத்து விஷால் தொடர்ந்த வழக்கில் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டது.

தொடர்புடைய படம்

இதை தொடர்ந்து திடீர் திருப்பமாக நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு நேற்று தென் சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தப்பட்டதை எதிர்த்து நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.