விஷ விதையை தின்ற சிறுவர்கள்…. வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு….!!

விஷ விதை என தெரியாமல் தின்ற 8 சிறுவர், சிறுமிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜீமங்கலம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வட மாநிலத்தை சேர்ந்த 3 குடும்பங்கள் தங்கி பாகலூர் பகுதியில் கூலித் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்தக் குடும்பங்களில் உள்ள சிறுவர்களான விஷால் குமார், பிகி குமார், விஷால் மற்றும் சிறுமிகளான பவிதா குமார், பார்வதி, சிபர்னி, சோனா குமாரி, ராதிகா ஆகிய 8 பேரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் கிடந்த விதை விஷ விதை என்று தெரியாமல் அதை எடுத்து அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர் மற்றும் சிறுமிகள் சாப்பிட்டுள்ளனர். அதன்பின் சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிறுவர் சிறுமிகள் அனைவரும் வாந்தி எடுத்து வாயில் நுரை தள்ளி மயங்கி கிடந்துள்ளனர். இதனை பார்த்த குடும்பத்தினர் சிறுவர் சிறுமிகளை உடனடியாக மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *