விஷ பூச்சி கடித்ததால்…. மாணவனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விஷ பூச்சி கடித்து 8-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள பூமங்களப்பட்டி பகுதியில் செந்தமிழ் செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமங்கலி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நிதிஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பள்ளியில் நிதிஷின் சகோதரியான அபியா என்பவர் படித்து வருகிறாள். கடந்த 22-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் இருந்த தார்ப்பாய் அப்புறப்படுத்தப்பட்டது. அப்போது அதிலிருந்த ஒரு விஷ பூச்சி நிதிஷை கடித்துள்ளது. இதனால் அந்த மாணவன் அலறி துடித்துள்ளான். இதுகுறித்து நிதிஷின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை.

இதனையடுத்து மாணவனை வீட்டிற்கு அழைத்து செல்ல அவனது சித்தப்பா பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது நிதிஷை ஒரு விஷ பூச்சி கடித்து விட்டதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நிதிஷை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு சித்தப்பா வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது வரும் வழியில் நிதிஷ் திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளான். இதனை பார்த்து பயந்து போன அவரது சித்தப்பா மாணவனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின் மாணவன் நிதிஷை வீட்டிற்கு டிஸ்சார்ஜ் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு வந்த நிதிஷ் திடீரென பரிதாபமாக உயிரிழந்தான். இதனை அறிந்த அவரது பெற்றோர் உறவினர்கள் கதறி அழுதுள்ளனர். அதன்பின் உறவினர்கள் கொட்டாம்பட்டி காவல்நிலையத்தில் மாணவனின் சாவுக்குக் காரணமான பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முற்றுகையிட்டுள்ளனர். இது குறித்து அறிந்த கொட்டாம்பட்டி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே மாணவனுக்கு பல்ஸ் இருப்பதாக தகவல் கிடைத்ததை அறிந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் மாணவனை வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு நிதிஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதன் பின் நிதிஷின் உடலை பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஆனால் அவர்கள் மாணவனின் உடலை வாங்க மறுத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவனின் உறவினர்கள் பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். அதன்பின் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின் மாணவனின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *