மனவேதனையில் இருந்த தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விசைத்தறி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காமாட்சிபுரம் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சர்வேஸ் என்ற மகன் உள்ளார். கடந்த சில மாதங்களாக சுப்பிரமணியனுக்கு முதுகு தண்டுவடத்தில் நோய் ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பார்த்தும் பலன் அளிக்காததால் பாலசுப்பிரமணியன் மன வேதனையில் இருந்துள்ளார்.

இதனால் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பாலசுப்பிரமணியன் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் வெளியே சென்ற அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்து பாலசுப்பிரமணியனை  உடனடியாக மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பாலசுப்பிரமணியனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *